நெல்லை அறிவியல் மையத்தில் ஓவிய போட்டி
நெல்லை அறிவியல் மையத்தில் ஓவிய போட்டி நடந்தது.;
நெல்லை மாவட்ட அறிவியல் மையம் மற்றும் திரவ உந்து எரிசக்தி வளாக மையம், இஸ்ரோ, மகேந்திரகிரி இணைந்து சர்வதேச நிலவு தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று பள்ளி மாணவர்களுக்காக வினாடி வினா போட்டி, ஓவிய போட்டியை அறிவியல் மையத்தில் நடந்தது.
ஓவியப்போட்டியில் 236 மாணவர்கள் பங்கேற்றனர். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் ஆசிர் பாக்கியராஜ், குழு இயக்குனர் ராஜபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.