பனைத்தொழில் பயிலரங்கம்

பரங்கிப்பேட்டை அருகே பனைத்தொழில் பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.;

Update:2023-07-28 00:15 IST

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சி வல்லம் கிராமத்தில் பனைத்தொழில் பயிலரங்கம் மற்றும் பயிற்சி பட்டறை தொடக்க விழா மற்றும் இயற்கை தானியங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவசங்கரிராம்மகேஷ் தலைமை தாங்கினார். ஜெர்லின் ஸ்வேதா வரவேற்றார். பனை ஆராய்ச்சி நிறுவனர் குமரிநம்பி, தலைமை நிர்வாக அதிகாரி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு பனைத்தொழில் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் பேசினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ராஜ்பிரவீன் பனைத்தொழிலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஜனனிஸ்ரீ நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்