பங்குனி திருவிழா கொண்டாட்டம்

கலிங்கப்பட்டி பகுதி கோவில்களில் பங்குனி திருவிழா கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்தனர்.

Update: 2023-04-05 18:45 GMT

திருவேங்கடம்:

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட மேலமரத்தோணி முப்புடாதி அம்மன், காளியம்மன், செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி அம்மன் பூச்சப்பர ஊர்வலமும் நடந்தது. பெண்கள் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும் வழிபட்டனர்.

இதேபோல் கீழமரத்தோணி காளியம்மன், முப்புடாதி அம்மன், விநாயகர் கோவிலிலும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கலிங்கப்பட்டி வடக்கத்தி அம்மன் மற்றும் விநாயகர் கோவிலில் பங்குனி திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பல்வேறு வகையான அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. மாவிளக்கு எடுத்தும், அக்னி சட்டி எடுத்தும் வழிபட்டனர்.

பின்னர் வடகத்தி அம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் வடக்குத்தெரு மற்றும் கீழத்தெரு வழியாக வந்து கலிங்கப்பட்டி பெரியகுளத்தில் கரைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்