மினி பஸ்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

மினி பஸ்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-04-15 19:15 GMT


விருதுநகரில் மினி பஸ்களை இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த மினிபஸ்சும் பழைய பஸ் நிலையத்திலேயே ஆக்கிரமித்து நிற்க அனுமதி அளிக்கப்படவில்லை. மினி பஸ்கள் பல்வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாக செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு முரணாக மினி பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையத்திலேயே நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து கழக பஸ்கள் நிறுத்தப்படுவதற்கு இடமில்லாமல் பஸ் நிலையத்தின் மையப்பகுதியிலும் மேற்கு பகுதியிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கான பஸ்களை கண்டறிவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே வட்டாரப் போக்குவரத்து அதிகாரி இதுகுறித்து உரிய ஆய்வு செய்து மினி பஸ்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் முறையாக இயக்கப்படவும், பழைய பஸ் நிலையத்தில் ஆக்கிரமித்து நிற்பதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்