பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் விழா
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்தநாள் விழா;
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பிறந்தநாள் இலக்கிய அமர்வு நடந்தது. வேதாரண்யத்தில் வாங்க பேசுவோம், பாடுவோம் என்ற அமர்வாக நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு மன்றத்தின் கிளைத் தலைவர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். கிளைச்செயலாளர் தங்க.குழந்தைவேலு, பொருளாளர் பாலாஜி, தமிழ்த்துறை ஆய்வு மாணவி சுகன்யா, சட்டக்கல்லூரி மாணவி அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் புயல்குமார், செயலாளர் தென்னடார் அம்பிகாபதி, பொருளாளர் கைலாசம் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில், பேராசிரியர் மாரிமுத்து, டாக்டர் மீனாட்சிசுந்தரம், தனிதாசில்தார் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வேதாரண்யத்தில் மக்கள் கலை விழாவை நடத்துவது என்றும், பள்ளி பாட புத்தகங்களில் அனைத்து வகுப்புகளிலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களையும், அவரின் வாழ்க்கை வரலாற்றையும் விரிவான அளவில் கொண்டுவர தமிழக அரசை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.