மயிலாடுதுறையில்,அமைதி ஊர்வலம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து மயிலாடுதுறையில்,அமைதி ஊர்வலம் நடந்தது;
மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி அமைதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமை தாங்கினார். புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய வளாகத்தில் மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கண்டித்தும், அங்கு பொது அமைதி நிலவிட வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலத்தில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.