வனப்பகுதியில் நிலத்தை திருத்தியவருக்கு அபராதம்

வனப்பகுதியில் நிலத்தை திருத்தியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update:2022-07-07 20:32 IST

கடையம்:

கடையம் வனச்சரக எல்கைக்கு உட்பட்ட மத்தளம்பாறையை ஒட்டியுள்ள பகுதியில் கடையம் வனச்சரக பயிற்சி உதவி வனப்பாதுகாவலர் ராதை தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வன எல்கையையும், அது ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் செய்தது கண்டறியப்பட்டது.

இதுசம்பந்தமாக நில மேற்பார்வையாளர் வெளியப்பன் என்பவரை விசாரணை செய்தபோது, வனத்துறையினரிடம் உரிய அனுமதியின்றி மரங்கள் மற்றும் வன எல்கையையும், அதன் ஒட்டியுள்ள பகுதியையும் திருத்தம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து துணை இயக்குனர் செண்பக பிரியா உத்தரவின்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்