வாகன ஓட்டிகளுக்கு ரூ.87 ஆயிரம் அபராதம்
நாமக்கல் அருகே போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.87 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.;
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவுப்படி நேற்று, நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சீட்பெல்ட் அணியாமல் காரில் வந்தவர்கள், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், செல்போன் பேசிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் என போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட ஒரு கனரக வாகனத்துக்கு ரூ.62 ஆயிரம் என மொத்தமாக ரூ.87 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.