தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகத்தில்கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி கலெக்டர் தகவல்

தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகத்தில்கடன் பெற்றவர்கள் அசல் தொகையை செலுத்தினால் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

Update: 2023-09-21 18:45 GMT

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12-ம் ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

அதாவது தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவு தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும். இந்த திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்