ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி ஆணையம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியல்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி ஆணையம்பட்டியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-19 21:06 GMT

கெங்கவல்லி, 

கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஊராட்சியில் ஊரக வேலைஉறுதித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த 3, 4, 6 ஆகிய வார்டுகளில் உள்ள இந்த திட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை தம்மம்பட்டி-கெங்கவல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அவர்கள் தங்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பாலுவை முற்றுகையிட்ட பொதுமக்கள் அவரிடமும் கோரிக்கை குறித்து வலியுறுத்தினர். இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு ஊரக ேவலை உறுதித்திட்டத்தில் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்