திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மேஸ்திரியார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவர் வீட்டிற்கு அருகிலுள்ள சீதளிகுளத்திற்கு குளிக்கச் சென்றவர் தவறி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 26-ந்தேதி காலையில் இருந்து தீயணைப்பு துறையினர் குளத்தில் அவரது உடலை தேடி வந்தனர். இந்த நிலையில் இரவு 11.30 மணியளவில் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.