முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கபட்டது

Update: 2023-06-17 18:45 GMT

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா உள்பட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பேசும்போது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள முதியோர்களை நல்ல முறையில் குழந்தைகளை பராமரிப்பது போன்று பாதுகாக்க வேண்டும். அவர்களை மனம் மற்றும் உடல் ரீதியாக காயப்படுத்தாமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்