வாலிபர் மீது போக்சோவில் வழக்கு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-06-21 06:30 IST

பொள்ளாச்சி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிறுமி மாயம்

ஆனைமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து உள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை வெளியே சென்ற சிறுமி வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில் கோட்டூர் பகுதியில் அந்த சிறுமி, 21 வயது வாலிபருடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் வால்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் அந்த வாலிபருக்கும், அந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

போக்சோ வழக்கு

இதற்கிடையில் காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால் கண்டித்தனர். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் கோட்டூரில் வாடகை வீட்டில் அடைத்து வைத்து அந்த சிறுமியை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்