வாகனம் மோதி புள்ளிமான் பலி

திருப்பரங்குன்றம் அருகே வாகனம் மோதி புள்ளி மான் இறந்தது.;

Update:2022-06-04 02:56 IST

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பாரப்பத்தி அருகே சுமார் 3 வயது மதிக்கதக்க ஒரு ஆண் புள்ளிமான் நேற்று காலையில் மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றது. இந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் திடீரென்று புள்ளிமான் மீது மோதியது. அதில் காயத்துடன் உயிருக்கு போராடிய அந்த மான் பரிதாபமாக இறந்தது. இது குறித்த தகவலின் பேரில் மதுரை புதூர் வனச்சரக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த புள்ளிமானை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்