கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

கம்பம் நகராட்சி சுகாதார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-10 17:11 GMT

கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளிடம் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைக்கு சென்ற கலெக்டர் அங்கு ஆய்வு செய்தார். பின்னா் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்ற அவர் அவர்களிடம் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தாார். இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, டாக்டர் மீனாட்சி சுந்தரம், தாசில்தார் அர்ஜூனன், வருவாய் ஆய்வாளர் நாகராஜ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்