போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

மணலி போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-05 21:52 GMT

பெரம்பூர்,

மணலி போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவர் சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் முதல்நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

போலீஸ்காரர் சிவகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இதனால் கடந்த வாரம் கணவருடன் கோபித்துக்கொண்டு சங்கீதா, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிவகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கீதா, மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது கணவர் சிவகுமார், புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மணலி போலீசார், தூக்கில் தொங்கிய சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக போலீஸ்காரர் சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்