காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-08-06 00:00 IST

திருத்துறைப்பூண்டி;

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அரிசி, பால், தயிர், உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்தும் திருத்துறைப்பூண்டியில் காங்கிரஸ் சார்பில் ஆா்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் அன்புவீரமணி, நகர தலைவர் எழிலரசன், முத்துப்பேட்டை நகர தலைவர் சதீஷ், வட்டாரத் தலைவர்கள் சங்கரவடிவேல், பாஸ்கர், முத்துப்பேட்டை வடுகநாதன், மாவட்ட தகவல் உரிமை பிரிவு தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்