பட்டத்தரசியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா

பட்டத்தரசியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா;

Update:2023-03-09 16:06 IST

மங்கலம்

மங்கலத்தை அடுத்த வேலாயுதம்பாளையத்தில் பட்டத்தரசியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ந்தேதி பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 4-ந்தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 6-ந்தேதி பிள்ளையார் பொங்கல் வைத்து வழிபாடு, 7-ந்தேதி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் வேலாயுதம்பாளையம் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாவிளக்கு எடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் பட்டத்தரசியம்மன் கோவிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் பட்டத்தரசியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 7 மணிக்கு கம்பம் கங்கை சேர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 


Tags:    

மேலும் செய்திகள்