விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது.

Update: 2022-08-28 17:17 GMT

ராமேசுவரம்,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேசுவரம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மறுநாள் 31-ந்தேதி அன்று 250-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது. இதில் ராமேசுவரத்தில் 16 இடத்திலும் மற்றும் தங்கச்சிமடம், பாம்பன், உச்சிப்புளி, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யப்பட உள்ளது.

அதுபோல ராமேசுவரத்தில் முக்கிய நகர் வீதியான தனுஷ்கோடி சாலையில் சுமார் 5 அடி உயரத்தில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இதுதவிர இந்து மக்கள் கட்சியின் சார்பிலும் ராமேசுவரம் நகரின் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட உள்ளது.

ஊருணியில் கரைப்பு

வருகிற செப்டம்பர் மாதம் 1-ந் தேதி அன்று ராமேசுவரத்தில் நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட உள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட உள்ளன. இதே போல் ராமநாதபுரத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அன்று விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஊருணியில் கரைக்கப்பட்ட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்