ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றம்
ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழ்மாதங்களில் ஆவணி மாதம் அவிட்டத்தில் பூணூல் மாற்றும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதில் பிராமணர்கள் உள்பட பூணூல் அணிபவர்கள் தாங்கள் அணியும் பூணூலை வைதீக முறைப்படி மாற்றிகொள்வார்கள். அதன்படி ஆவணி அவிட்டத்தையொட்டி புதுக்கோட்டையில் பல இடங்களில் நேற்று பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முறைப்படி பூணூல் மாற்றிக்கொண்டனர். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் பொன்னமராவதியில் விஸ்வகர்மா சமுதாய நல சங்கத்தின் சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வலையப்பட்டி மலையாண்டி கோவிலில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர்.