மலையாண்டி கோவிலில் பவுர்ணமி கிரிவலம்

மலையாண்டி கோவிலில் பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர்.;

Update:2022-07-14 00:26 IST

பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி மலையாண்டி கோவில் நகரத்தார்கள் சார்பாக மலையாண்டி கோவில் மலை ஊரணியை சுற்றி ஏராளமான நகரத்தார்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பக்தர்கள் என பலரும் கலந்து கொண்டு பவுர்ணமி கிரிவலம் சென்றனர். பக்தர்கள் கோவிலைச்சுற்றி 3 முறை கிரிவலம் வந்து பின்பு மலையாண்டி கோவில் மலைமேல் உள்ள அம்மனை தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு நகரத்தார்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்