ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்தால் 7 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

ஆலந்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தீ விபத்தால் 7 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

Update: 2022-10-08 08:51 GMT

சென்னையை அடுத்த ஆலந்தூர் எம்.கே.என். சாலையில் உதவி மின்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு 33 கே.வி. திறன் கொண்ட மின்பகிர்மான நிலையமும் உள்ளது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யக்கூடிய 'பிரேக்கர்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாரிய அலுவலகத்தில் ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக இந்த 'பிரேக்கர்கள்' திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அலுவலக ஊழியர்கள், உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இது பற்றி மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியாக மீண்டும் மின் இணைப்பு கொடுத்தனர். இதனால் ஆலந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 7 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.

Tags:    

மேலும் செய்திகள்