கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2022-08-19 14:56 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று(சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. எனவே இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கோவில்பட்டி, கழுகுமலை, எப்போதும்வென்றான், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைசாமிபுரம், செட்டிகுறிச்சி,

சன்னதுபுதுக்குடி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் கிராம பகுதிகளுக்கு வரை மின்சாரம் கிடைக்காது என்று மின்வாரிய செயற் பொறியாளர் எம்.சஹர்பான் தெரிவித்துள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்