அரிமளம், கீரமங்கலத்தில் இன்று மின் நிறுத்தம்

அரிமளம், கீரமங்கலத்தில் இன்று (சனிக்கிழமை)மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update:2022-12-03 00:54 IST

அரிமளம், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அரிமளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரிமளம், காமாட்சிபுரம், மிரட்டுநிலை, தாஞ்சூர், வெட்டிக்காடு, பொந்துப்புளி, ஓணாங்குடி, சிராயன்பட்டி, சத்திரம், கோவில்வாசல், கொத்தமங்கலம், மேல்நிலைப்பட்டி, வடகாட்டுப்பட்டி, கும்மங்குடி, துறையூர், கீரணிப்பட்டி, தேனிப்பட்டி, வம்பரம்பட்டி, வாளற மாணிக்கம், கரையப்பட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என திருமயம் உதவி செயற்பொறியாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.

கீரமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கீரமங்கலம், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி, கொடிக்கரம்பை, காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம் உள்ளிட்ட பகுதிகள். ஆவணத்தான்கோட்டை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆவணத்தான்கோட்டை, ராஜேந்திரபுரம், பெரியாளூர், குளமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கீரமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்