நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை துணைமின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, புதன்சந்தை, கொளத்துபாளையம், ஏளூர், தத்தாத்திரிபுரம், கல்யாணி, நாட்டாமங்கலம், அம்மாபாளையம், கொழிஞ்சிப்பட்டி, புதுச்சத்திரம், பாச்சல், பிடாரிப்பட்டி, மூணுசாவடி, களங்காணி, காரைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.