அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது.;

Update:2023-09-23 23:44 IST

கடவூர் அருகே உள்ள கணியலம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா பயிற்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை தாங்கினார். துணை முதல்வர் யோகநாதன், முதலாம் ஆண்டு துணை தலைவர் அமுதா முன்னிலை வகிதனார். முகாமில் மனவளக்கலை ஆசிரியர் சுப்பையன், துணை ஆசிரியர்கள் சதாசிவம், அருள்நிதி ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி வழங்கினர். இதில் பாலிடெக்னிக் கல்லூாி மாணவ-மாணவிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

மேலும் செய்திகள்