உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்தசாமியார் உருவ பொம்மை எரிப்புதி.மு.க.வினர் போராட்டம்
உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி என்று அறிவித்த சாமியார் உருவ பொம்மையை திமுக வினர் எரித்தனா்.;
திண்டிவனம்,
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து, சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவுக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், திண்டிவனத்தில் தி.மு.க.வினர் ேநற்று சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், திடீரென சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் சீனி ராஜ், பார்த்திபன், சதீஷ், சுதாகர், நிர்வாகிகள் வெண்ணிலா கபிலன், வக்கீல் டி.கே.பி. ரமேஷ், பிர்லா செல்வம், அரசு ஒப்பந்ததாரர் நந்தா, இளங்கோவன், தரணி, அன்னை சந்தானம், ராஜேஷ், முஸ்தபா, குணசேகர், சாரங்கபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.