தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி
ஆன்லைனில் தொழில் முதலீடு செய்த தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது.;
ஆன்லைனில் தொழில் முதலீடு செய்த தனியார் நிறுவன அதிகாரியிடம் ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இது குறித்து சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
தனியார் நிறுவன அதிகாரி
கோவை கணபதி ஜானகிநகரை சேர்ந்தவர் யோகநாதன் (வயது35). இவர் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் மேற்பார்வை யாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைனில் பகுதி நேரமாக பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார்.
இந்த நிலையில் யோகநாதன் பயன்படுத்திய டெலிகிராம் செயலி யில் பணி கொடுத்து அதன் மூலமாக கமிஷன் வழங்கும் தொழில் குறித்த தகவல் வந்தது. அதை நம்பி அவர், 12 தவணை களாக அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் ரூ.11 லட்சத்து 12 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
வழக்கு பதிவு
யோகநாதன் முதலில் தவணைத்தொகை செலுத்திய போது 2 முறை ரூ.200 கமிஷனாக கிடைத்து உள்ளது. அதன் பிறகு கமிஷன் தொகை ஏதும் வர வில்லை. மேலும் முதலீடு செய்த தொகையும் திரும்ப கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த யோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.