தனியார் நிறுவன ஊழியர் மாயம்

தனியார் நிறுவன ஊழியர் மாயம் ஆனார்.

Update: 2023-07-17 18:15 GMT

பசுபதிபாளையம் அருகே உள்ள ராமா கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம் (வயது 40). இவர் கரூரில் உள்ள ஒரு செல்போன் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணிக்கவாசகம் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து மாணிக்கவாசகத்தின் மனைவி கங்கா தனது கணவரை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து கங்கா கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மாணிக்கவாசகத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்