தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
கோவையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.;
உக்கடம்,
கோவை உக்கடம் கோட்டைமேட்டை சேர்ந்தவர் கணேஷ்ராவ் (வயது 42). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்து வந்தார். அவர் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட் டது. இதனால் மனவேதனை அடைந்த கணேஷ்ராவ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.