தனியார் பள்ளி ஆசிரியை பலாத்காரம்

திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2023-06-03 02:45 IST

திருமணம் செய்து கொள்வதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியையை பலாத்காரம் செய்த தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியை

கோவையை சேர்ந்த 37 வயது பெண், பேரூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணியாற்றி வரும் சக ஆசிரியர் மூலம் வடவள்ளியை சேர்ந்த தொழில் அதிபர் சந்தோஷ் குமார் (42) அறிமுகம் ஆனார்.

அவர் என்னிடம் சகஜமாக பேசி பழகியதால் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். பின்னர் அவர் எனக்கு திருமணம் ஆகாததை தெரிந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர், தனக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் என்னிடம் கூறினார்.

பலாத்காரம்

மேலும் நான் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறினார். நானும் அதை நம்பி சரி என்று கூறினேன்.

இதற்கிடையே அவர் ஒருநாள் என்னை வடவள்ளியில் உள்ள ஒரு வீட்டுக்கு வரச்சொன்னார். நானும் அங்கு சென்றேன்.

அப்போது அவர் நான் எனது மனைவியை விவாகரத்து செய்து விட்டேன். எனவே உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி என்னை பலாத்காரம் செய்தார்.

மேலும் அவர் தனது தொழில் ரீதியான தேவைக்காக கடந்த 4 ஆண்டாக என்னிடம் இருந்து ரூ.35 லட்சம் வாங்கினார். அதில் ரூ.10 லட்சத்தை திரும்ப கொடுத்து விட்டார்.

தொழில் அதிபர் மீது வழக்கு

தற்போது அவர், என்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பது டன், என்னிடம் இருந்து வாங்கிய ரூ.25 லட்சத்தையும் கொடுக்க மறுக்கிறார். இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதன் பேரில் கொலை மிரட்டல், பலாத்காரம் செய்தல், மோசடி ஆகிய பிரிவின் கீழ் சந்தோஷ்குமார் மீது பேரூர் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்