கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - கல்வித்துறை

கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-01 16:31 GMT

சென்னை,

கொரோனாவில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கொரோனாவின் காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளில் தற்போது படித்துக் கொண்டிருந்தால் அவர்கள் அதே பள்ளிகளில் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருந்தால் அதிலிருந்து விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்டிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்