திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Update: 2023-01-10 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2021-22-ம் நிதியாண்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக 10 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் இருளர் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மேம்பாடு செய்தல், தேசிய கிராம சுயாட்சி திட்டம் குறித்து ஆய்வு நடத்தினார்.

விரைந்து முடிக்க வேண்டும்

அதேபோல சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, குளங்கள் மற்றும் ஏரிகள் தூர்வாருதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டம், கிராம சாலைகள் மற்றும் குளங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். பின்னர், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

மேலும், புதிய திட்ட பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்