ராசிபுரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update:2023-03-22 00:15 IST

ராசிபுரம்:

ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்பாட்டம் நடந்தது. சங்க ராசிபுரம் தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்