நாமக்கல்லில் பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update:2023-03-22 00:15 IST

நாமக்கல்:

பேரூராட்சிகளில் பணிபுரியும் கணினி இயக்குபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் விவேகபாரதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் திட்ட பராமரிப்பு, தூய்மைபணி ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ஒவர்சீயர் பதவி உயர்வு வழங்க வேண்டும். கீழ் நிலை பணியாளர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்