குஜராத்தில் ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு - சென்னையில் ஜெயின் சமூகத்தினர் ஊர்வலம்

குஜராத்தில் ஜெயின் ஆலயத்தை சுற்றுலா தலமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் 5 ஆயிரம் பேர் சென்னையில் ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-01-06 06:05 GMT

சென்னை,

ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலத்தில் ஜெயின் கோவிலை சுற்றுலா தலமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஜெயின் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தி வருகிறார்கள்.

சென்னையிலும் ஏராளமான ஜெயின் சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களும் ஜார்க்கண்ட், குஜராத்தில் ஜெயின் கோவிலை சுற்றுலா தலமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் இன்று அவர்கள் பேரணி நடத்தினர். சிந்தாதிரிப்பேட்டையில் சி.எம்.சி.டி.ஏ. பாலம் அருகில் திரண்ட ஜெயின் சமூகத்தினர் ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர்.

ஸ்ரீமகா ஜெயின் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 5 ஆயிரம் ஜெயின் சமூகத்தினர் கலந்து கொண்டனர். சி.எம்.டி.ஏ. அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கூவம் கரையோரமாக சென்று ராஜரத்தினம் ஸ்டேடியத்தை அடைந்தது. இதையொட்டி ஏராளமான போலீசார் எழும்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்