சுடுகாட்டுக்கு இடம் கேட்டு மண்டை ஓட்டுடன் பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம் அருகே சுடுகாட்டுக்கு இடம் கேட்டு பொதுமக்கள் கையில் மண்டை ஓட்டுடன் கோரிக்கை வைத்தனர்.;

Update:2023-06-06 00:00 IST

சுடுகாட்டுக்கு இடம்

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தை அடுத்த போளிப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு சுடுகாடு இல்லாததால் இறந்தவர் உடலை ஓடைக்கால்வாயில் புதைத்து வருகின்றனர். மழை காலங்களில் ஓடைக்கால்வாய்களில் வெள்ளம் வரும்போது உடலை அடக்கம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால் சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மண்டை ஓட்டுடன் கோரிக்கை

இந்தநிலையில் நேற்று சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கக்கோரி அப்பகுதி மக்கள் கையில் மண்டை ஓட்டுடன் நூதன முறையில் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்