தம்மம்பட்டியில் இறைச்சி கடையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

தம்மம்பட்டியில் இறைச்சி கடையை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2022-07-14 21:42 GMT

தம்மம்பட்டி,

தம்மம்பட்டி பேரூராட்சி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவர் உடையார்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் ஆட்டு இறைச்சி கடை வைத்து உள்ளார். இந்த நிலையில் நேற்று பேரூராட்சி இளநிலை உதவியாளர் சிவமணி தலைமையில் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் டிராக்டருடன் சுரேசின் இறைச்சி கடை பகுதிக்கு வந்தனர். அங்கு அவரது கடை ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், மேலும் அந்த இடத்தில் கழிப்பிடம் கட்ட உள்ளதாகவும் கூறி கடையை அகற்ற வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் குடியிருப்பு இடமாக உள்ளதால் அங்கு கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தவர்களை முற்றுகையிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினா். பின்னர் பணியாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். அதேநேரத்தில் அந்த பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் மனு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்