கோவிலை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோனியம்மன் கோவில் அருகே பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.;

Update:2022-08-04 19:51 IST

கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோனியம்மன் கோவில் அருகே பா.ஜனதா கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

கோவில் சுற்றுச்சுவர் இடிப்பு

கோவை அவினாசிரோடு கோல்டுவின்ஸ் பகுதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவன்கோவில் உள்ளது. அதை அகற்ற வேண்டும் என்று தனியார் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

கோவில் சார்பில் யாரும் ஆஜர் ஆகாததால் வழக்கின் தீர்ப்பு அடுக்குமாடி குடியிருப்போருக்கு சாதகமாக அமைந்தது.

இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்காக மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சென்று சுற்றுச்சுவரை இடித்தனர். இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில், பெண் பக்தர்கள் ஓம் நமச்சிவா யா என்று கோஷமிட்டபடி கண்ணீர் மல்க எதிர்ப்பு தெரிவித்த னர்.

உடனே அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களிடம் பொதுமக்கள், கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் தேவை என்று கூறினர்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் கோவில் சுற்றுச்சுவர், கழிவறை ஆகியவற்றை மட்டும் இடித்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் கோனியம்மன் கோவில் நிலத்தை தனியார் ஓட்டல் நிர்வாகம் ஆக்கிரமித்து உள்ளதை மீட்க வேண்டும் என்று பாரதீய ஜனதாவினர் தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்