தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்

தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-22 17:14 GMT
மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள், தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கித்தருவதாக அறிவித்தனர். இதனை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அந்த நிறுவனத்தை அணுகினர். வேலை கேட்டு வந்தவர்களிடம் நுழைவுக் கட்டணம் மற்றும் வைப்புத் தொகையை அந்த நிறுவனத்தினர் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2 மாதங்கள் கடந்தும் பணம் கட்டியவர்களுக்கு அந்த நிறுவனத்தினர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த பொதுமக்கள் வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்