ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-27 14:21 GMT

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் ஆகாரம் கிராமத்துக்கு சொந்தமான அனாதின நிலம் மற்றும் மேய்க்கால் நிலம் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் நெசல் அருகில் உள்ளது.

இந்த இடம் சுமார் 46 ஏக்கர் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் தனிநபர்கள் பலர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும் அதற்காக தவறாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவற்றை மீட்டு தர வேண்டும் என மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், ஆகாரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆறுமுகம், பெருமாள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மகளிர்களுடன் சென்று ஆரணி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் உதவி கலெக்டர் எம்.தனலட்சுமியிடம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு தரக்கோரி கோரிக்கை மனு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்