புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 95 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் காரில் கடத்தப்பட்ட 95 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-08 18:45 GMT

புதுக்கோட்டையில் காரில் கடத்தி செல்லப்பட்ட 95 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில், புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜன் மற்றும் போலீசார் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக காரில் கடத்தி வந்தது தெரியவந்தது.

பறிமுதல்

உடனடியாக போலீசார் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததாக தூத்துக்குடி குலையன்கரிசலை சேர்ந்த தங்கபாண்டி மகன் மாரிராமர் (வயது 35) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 95 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்