அரக்கோணம் நகராட்சியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரக்கோணம் நகராட்சியில் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-06-11 23:09 IST

அரக்கோணம்

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' எனும் தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் நகராட்சியில் நடைபெற்றது.

நகராட்சியில் தயாரிக்கப்பட்ட இயற்கை உர பை 100 பேருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி, நகராட்சி ஆணையர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் நகரமன்ற துணைத்தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ், நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்