குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி அருகே குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்தது.;

Update:2022-12-27 00:15 IST

கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து மலைப்பாம்பு, சாரப்பாம்பு போன்ற வன உயிரினங்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது அடிக்கடி நடக்கின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் புதிய குடியிருப்பு பகுதிக்குள் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணகிரி வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனக்காவலர் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பழனிசாமி, மாதப்பன், ஆகியோர் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அதை நாரலப்பள்ளி காப்பக் காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்