மது அருந்தும் போது தகராறு:பெயிண்டரை தாக்கிய நண்பர் கைது
மது அருந்தும் போது தகராறு:பெயிண்டரை தாக்கிய நண்பர் கைது;
பொள்ளாச்சி
சென்னையை சேர்ந்தவர் பாபு (வயது 50). இவரது நண்பர் பன்னீர் செல்வம் (46). இவர்கள் 2 பேரும் பொள்ளாச்சி அருகே ஏ.நாகூரில் தங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் பன்னீர்செல்வம் இரும்பு தகடை எடுத்து பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாபுவின் கழுத்து, முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து பன்னீர் செல்வத்தை கைது செய்தனர்.