வெறிநோய் தடுப்பூசி முகாம்
மருதூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.;
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவி ராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி வரவேற்றார்.கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன் முன்னிலை வகித்தார். இதில் கால்நடை உதவி டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம், பாலசிங்கம், பூபதி ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் மருதூர், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.