வெறிநோய் தடுப்பூசி முகாம்

கட்டுமாவடி ஊராட்சியில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2023-01-09 18:45 GMT

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றிய அளவில் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.கால்நடை உதவி டாக்டர்கள் பெரோஸ் முகமது, புறாக்கிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை உதவி டாக்டர் முத்துகுமரன் வரவேற்றார். இதில் கால்நடை உதவி டாக்டர்கள் பிரியதர்ஷினி, சிவப்பிரியா, அருண், பூபதி ஆகியோர் பொதுமக்கள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் விலங்குகள் வதை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் கட்டுமாவடி, புறாக்கிராமம், தண்டாளம் உள்ளிட்ட கிராம பகுதியில் உள்ள 120-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்