அகலரெயில் பாதை மின்மயமாக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு

திருவாரூர்- காரைக்குடி அகலரெயில் பாதை மின்மயமாக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனா்.;

Update:2023-07-27 00:45 IST

திருத்துறைப்பூண்டி;

திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை பணிகள் கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அனைத்து பணிகளும் 2018-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்த வழித்தடம் மின் மயமாக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழகம் முழுவதும் ரயில்வே பாதை மின் மயமாக்கும் பணி முடிவு பெற்றுவிட்டது. ஆனால் திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ெரயில் பாதையை மின்மயமாக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. தற்போது பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று மத்திய ெரயில்வே வாரியம் திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான அகல ெரயில் பாதையை மின்சாரமயமாக்கும் பணியை செய்ய ரூ.143.07 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தினர் மத்திய ரெயில்வே வாரியத்துக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்