சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

Update: 2024-05-25 13:28 GMT

சென்னை,

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறக்கூடும். இது நாளை காலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு வங்காளதேச கேப்புப்பாராவிற்கும் மேற்குவங்காள சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மாலை லேசான மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கொளத்தூர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் இன்று பெய்த மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்