நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை

சங்கரன்கோவிலில் நகராட்சி அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.;

Update:2023-06-19 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது, தூய்மை பணி மேற்கொள்வது குறித்து நகராட்சி அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், சுகாதார அலுவலர் பாலச்சந்தர், மேற்பார்வையாளர் கோமதிநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், ''சங்கரன்கோவில் பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக வரவில்லை என்ற புகார் வந்து கொண்டிருக்கின்றது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறினார். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள் கூறுகையில், தற்போது சங்கரன்கோவிலுக்கு வரும் குடிநீர் வரத்து குறைந்துள்ளதால் சீராக வினியோகம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து ராஜா எம்.எல்.ஏ. பேசுகையில், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் வினியோகம் சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சுகாதார பணிகள் முழு வீச்சில் நடைபெற வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார். இதில் ஏதேனும் தேவைப்பட்டால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.


Tags:    

மேலும் செய்திகள்